சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி புதுவை போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இடையேயான ஓவிய போட்டி புதுவை பாரதி பூங்காவில் நடைபெற்றது.*

புதுவை போக்குவரத்து துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை பாரதி பூங்காவில் நடைபெற்றது. புதுச்சேரியில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியப்போட்டி பாரதி பூங்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிக வேகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கைபேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் 3 பிரிவுகளின் கீழ் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர்

admin