புதுச்சேரியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக காவல் துறை இயக்குனர் சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்

கடற்கரை சாலையிலுள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி ஜி பி சுந்தரி நந்தா புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் ஹெல்மெட் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் முதல் தடவை 100 ரூபாய் அபராதமும் இரண்டாம் முறை 300 ரூபாய் அபராதமும் விதிகப்படுமென கூறிய அவர் மூன்று முறைகளுக்கு மேல் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டுபவரின் லைசென்ஸ் உரிமம் இரத்து செய்யப்படுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் செய்து வந்த நிலையில் கடந்த ஆறுமாதங்களாக ஹெல்மெட் அணிவது குறித்து காவல் துறையினர் கண்காணித்து வந்ததில் பொதுமக்கள் யாரும் ஹெல்மெட் அணிய விரும்புவதில்லை எனவும் கடந்த மூன்று வருடங்களில் 322 பேர் ஹெல்மேட் அணியாமல் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீசார் மீது கூட அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சுந்தரி நந்தா கூறியுள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018 மே மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் அணிவது நடைமுறை படுத்தியபோது அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து படிப்படியாக அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் கூட முதலமைச்சர் நாராயணசாமி சட்டத்தினை மக்கள் மீது திணிக்காமல் படிபடியாக அமல்படுத்தப்படும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த சூழ்நிலையில் துணை நிலை கிரண்பேடி நடைமுறையில் இருக்கும் ஹெல்மெட் சட்டத்திற்கு எதிராக நாராயணசாமி செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் டி ஜிபி ஹெல்மெட் அணிவது நாளை மறுதினம் முதல் கட்டாயமயக்கப்படும் என கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி – சுந்தரி நந்தா (டிஜிபி புதுச்சேரி )

admin